லண்டனில் எதிர்வரும் 05/07/2015 அன்று வல்வை நலன் புரிச் சங்கத்தினரால் நடாத்தப்பட இருக்கும்
10ஆவது ஆண்டு கோடை விழா இம்முறை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளதால் மக்களிடையே
பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கின்றது.
லண்டன் மாநகரில் அதிகளவு தமிழ் மக்கள் கலந்து சிறப்பிக்கும் இந்தக் கோடை விழா இம்முறை
05/07/2015 ஈகைக் கொடையாளர்களின் தினத்தில் நடை பெறவுள்ளதால்
இந்த விழா கூடுதல் சிறப்பைப் பெறுகின்றது.
மேற்படி விழாவுக்கான ஒழுங்குகள் சம்பந்தமான சிறப்புப் பொதுக்கூட்டம் நேற்றைய தினம்
லண்டனில் நடைபெற்றது.
அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய கூட்டத்தில் சகல விதமான வேலைகளுக்குமான திட்டங்களும்
வகுக்கப்பட்டு அந்தந்தப் பிரிவுப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.