எதிர்வீரசிங்கம் நடந்த 1952 ,1956 ஒலிம்பிக்கில் உயரம் பாய்தலில் பங்கு பெற்றவர் ,முதல் முதல் ஒலிம்பிக்கில் கடைசி சுற்றில் பங்கு பற்றிய ஒரே ஒரு இலங்ககைத் தமிழர்,
யாழ் மத்திய கல்லூரியில் படித்த காலத்தில் சொல்லுவார்கள் இந்தப் பாடசாலையில் படித்த ஒருவர் ஒலிம்பிக்கில் இரண்டு முறை கலந்து கொண்டார் என்று. அதுவும் வெறும் காலில் சப்பாத்தும் போடாமல் அவர் மத்திய கல்லூரி மைதானத்தில் பாய்ந்து பழகி, உலகின் முக்கிய விளையாட்டு அங்கீகாரமான ஒலும்பிக்கில் அவர் பாய்ந்து அசத்தினார் என்றும் சொன்னார்கள். அவர்தான் இவர் டாக்டர் எதிர்வீரசிங்கம்,
தற்சமயம் அமரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கும் டாக்டர் எதிர்வீரசிங்கம் நடந்த 1952 ,1956 ஒலிம்பிக்கில் உயரம் பாய்தலில் பங்கு பெற்றவர் ,முதல் முதல் ஒலிம்பிக்கில் கடைசி சுற்றில் பங்கு பற்றிய ஒரே ஒரு இலங்ககைத் தமிழர், தென் இலங்கை வாழ் டங்கன் வைட் , சுசந்திகா ஜெயசிங்க ,இன்னும் சிலர் பின்நாட்களில் ஒலிம்பிக் பதக்கம் வென்றார்கள்.
1958 இல் நடந்த ஆசிய விளையாடுப் போட்டியில் உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இலங்கையர். அதனால் தென் இலங்கை சிங்கள விளையாட்டு வீரர்களை ஆ வெண்டு அண்ணாந்து பார்க்க வைத்து அதிசயிக்க வைத்தவர், யாழ் மத்திய கல்லூரி கிரிகெட் டீமில் இருந்து விளையாடி இருக்கிறார். 1973 இல் UNISEF இல் அவர் வேலை செய்த ஆபிரிக்க நாடான சியராலியோன் இல் கிரிகெட் தேசிய அணியின் வைஸ் கப்டன் ஆக இருந்து இருக்கிறார்.
ஆனாலும் இன்றைவரை டாக்டர் எதிர்வீரசிங்கம் ஒருவர் தான் யாழ்ப்பாணத் தமிழர் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக முதல் முதல் பங்குபற்றியவர் . அண்மையில் அவர் தான் படித்த யாழ் மத்திய கல்லூரிக்கு வந்த போது கிரிக்கெட் பயிட்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு பந்து வீசிய போது இந்தப் படம் எடுத்து இருக்கிறார்கள். ..
In gloriam Dei optimi maximi என்ற லத்தின் மொழி வாக்கியத்தை தொப்புள்கொடியில் எழுதி வைத்து (Unto the glory of God, the best and the highest)” என்பதின் அடையாளமாக சென்றல் கொடி என்றும் தாழ்வு பெறாது ” என்ற உற்சாக வாக்கியம் உள்ள அந்தப் பாடசாலைக் கீதத்தில் , பல விளையாட்டுவீரர்களை உருவாக்கிய அந்தத் தாயின் கனவை உலக அரங்கில் ஒலிக்க விட்ட யாழ் மத்திய கல்லூரி உருவாகிய ஒரு விளையாட்டு வீரன், அக்கடமிக் அறிவாளி, சமூக சிந்தனையாளர் டாக்டர் எதிர்வீரசிங்கம்..
………உயரங்களைத் தாண்டியவர்கள் எளிமையாகத்தான் இருக்கிறார்கள்……









