இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

128 பக்கங்களைக் கொண்ட இந்த இரகசிய அறிக்கையில், பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், ஐநா தனது பொறுப்பிலிருந்து தவறியமை குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், யுத்த வலயத்தில் சிக்குண்ட பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை என்றும், மிகமோசமாக பரந்தளவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிடவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு பயந்தே இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட தகவல்கள் மிக முக்கியமானவையாக இருக்கக் கூடும் எனவும் இந்த விடயத்திலும் ஐ.நா தவறிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *