வல்வை செய்திகள்

யா/வல்வை சிதம்பராக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தர பரீட்கைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விஞ்ஞான பாடத்திற்கான செய்முறை தொடர்பான செயலமர் நடைபெற்றது 22.06.2015

வடமராட்சி மாணவர்களின் கல்விஅபிவிருத்திக்கான விஞ்ஞான பாட செயலமர்வு 22.06.2015
சுவிஸ் அன்பே சிவம் அமைப்பினரால்,செல்வகுமார்.கவிதா தம்பதியினரின் அனுசரணையுடன் வடமராட்சி வலயத்திற் குட்பட்ட பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்கைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விஞ்ஞான பாடத்திற்கான செய்முறை தொடர்பான செயலமர்வு வடமராட்சியில் 9 நிலையங்களில் நடைபெறுகின்றது.இதில் யாஃவல்வை சிதம்பராக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் அதிபர் திரு.எஸ்.இராஜதுரை.தலைமையில் ஆரம்பமானமானது. இதில் வடராட்சி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திரு.யோ.இரவீந்திரன். திரு.எஸ்.ஸ்ரீகரன் ஆகியோருடன்.அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் திரு.அருளானந்தசோதி.முன்னாள் வடமாகாண பாடசாலை மேம்பாட்டுத் திட்டத்தின் உலக வங்கியின் நிபுணத்துவ ஆலோசகர் திரு.ந.அனந்தராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கருத்துரைகளை வழங்கினர். சிதம்பராக் கல்லூரியின் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆய்வு கூடத்தில் இடம் பெற்ற மேற்படி விஞ்ஞான பாட செய்முறைக்கான செயமர்வில் யாவல்வை சிதம்பராக் கல்லூரி.வல்வை மகளிர் மகா வித்தியாலயம்.வல்வெட்டி இ.த.க.பாடசாலை.வல்வை சிவகுரு வித்தியாலயம். தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்.பொலிகண்டி இ.த.க.பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 105 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் இப்பிரதேசத்தில் கடமையாற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்கள் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *