வல்வெட்டித்துறை கொத்தணி முன்பள்ளிகள் விளையாட்டுப் போட்டி சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது வல்வெட்டித்துறை கொத்தணிக்கு உட்பட்ட 8 முன்பள்ளிக்கள் இவ் விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டன. கொத்தணி முன்பள்ளிகளில் நெடியகாடு கணபதி படிப்பகம், மதவடி விக்னேஸ்வர படிப்பகம், ஆதிகோவில் ஆதிசக்தி முன்பள்ளி, கெருடாவில் அம்பிகை முன்பள்ளி, மானங்கனை திருமகள் முன்பள்ளி, தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி, தொண்டைமானாறு பவானி முன்பள்ளி ஆகிய முன்பள்ளிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றின