வல்வை சிதம்பர கல்லூரி அதிபர் இடமாற்றத்தை எதிர்த்து பெற்றோர்கள் மாணவர்கள் ஆர்பாட்டம் வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரி அதிபர் இடமாற்றத்தை எதிர்த்து பெற்றோர்கள் மாணவர்கள் இன்று காலை சுமார் 7 மணியளவில் கல்லூரிக்கு முன்னால் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அதிபர் இடமாற்றத்தை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஓட்டப்படிருந்தன. வல்வெட்டித்துறை யா/சிதம்பராக்கல்லூரியின் தற்போதைய அதிபரான கிட்டினப்பிள்ளை-இராஜதுரை அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டாமென அப்பாடசாலை மாணவர்களினால் இன்று 7.00காலை மணியளவில் பாடசாலையின் கதவுகள் பூட்டப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த்தினர்.
இதன்படி நவுண்டில் தாமோதரா வித்தியாலய அதிபராகிய குருகுலசிங்கம் அவர்களை யா/சிதம்பராக்கல்லாரிக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
வடமாகாண கல்வி அமைச்சினால் இந்த இடமாற்ற நடவெடிக்கைகள் மேற்கொள்ளபட்டிருந்த போதிலிலும் மாணவர்களும்,பெற்றோர்களும் இதனை கருத்தில் கொள்ளாது இவ் ஆர்ப்பாட்டத்தில் அதிபரை மாற்ற இடமளிக்க மாட்டொமெனவும்,வலயக்கல்வி பணிப்பாளர்களே எங்கள் கல்வியை சீர் அழிக்காதீர்கள் என்ற கோசத்துடன் மூடிய பாடசாலைக்கு வெளியே நின்று ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து 8.30மணியளவில் அங்கு வந்த கோட்டைக்கல்வி அதிகாரியான சிவபாலன் நந்தகுமார் அவர்கள் ௬றுகையில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் காலம் முடியும் வரைக்கும் எந்தவொரு இடமாற்றமும் நடைபெறாது எனவும் மாணவர்களை கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுமாறு வேண்டினார்.
இதன்படி மாணவர்கள் பாடசாலையின் கதவினை திறந்து கற்றல் நடவெடிக்கைகளில் ஈடுபட்டனர்.






































































