கிளிநொச்சியில் பெண்களை படையில் இணையுமாறு -படையினர் மிரட்டல்!

கிளிநொச்சியில் உள்ள பெண்களை கட்டாயமாக படையில்; இணைந்து கொள்ளுமாறு சிறிலங்கா படையினர் மிரட்டி வருகின்றனர்.குறிப்பாக கிளிநொச்சியில் உள்ள கிராமங்களிற்குச் செல்லும் சிறிலங்கா படையினர் அப்பகுதி கிராம சேவகர்களை மிரட்டுவததுடன், ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்று மாணவர்களையும் சிறிலங்கா படையில் இணைந்து கொள்ளுமாறு பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 109 பெண்கள் அண்மையில் படையில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிராம மட்டத்திலான சிவில் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவே பிரச்சாரப்படுத்தப்பட்டது.

ஆயினும் அவர்கள் அனைவரும் கட்டாயத்தில் பேரில் சிறிலங்கா படையில் இணைத்துக் கொள்ளப்பட்னர். இதே போன்ற நடவடிக்கையிலேயே தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு சென்ற சிறிலங்கா படையினர் அப்பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்றும் மாணவி ஒருவருடைய விடுகைப் பத்திரத்தை தருமாறு அப்பாடசாலை அதிபரை வற்புறுத்தியுள்ளனர்.இவ்விடையத் தொடர்பாக பாடசாலை அதிபர் விசாரித்த போது விடுகைப் பத்திரம் கோரப்பட்ட விடையம் அம் மாணவிக்கும், அவருடைய பெற்றோருக்கும் தெரியாமல் சிறிலங்கா படையினர் தன்னிச்சையாக பெற முயற்;சித்தது தெரியவந்துள்ளது.

இவ்வாறு பல சம்பவங்கள் கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. சிறிலங்கா படையினரின் கோரிக்கைக்கு செவி மடுக்காத அதிபர்களை அச்சுறுத்தும் வகையில் அந்தந்தப் பகுதி சிறிலங்கா படைக்கு பொறுப்பான கட்டளைத் தளபதி தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.