கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க முடியாமல் சிதைவுற்ற நிலையிலிருந்த வல்வை சிதம்பராக்கல்லூரி பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி வலயத்தில் வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்திற்குட்பட்ட உயர்தரக் கல்லூரியான சிதம்பராக்கல்லூரி யாழ் மாவட்டத்திலேயே முன்னணித் தரத்திலான விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று சிதம்பராக்கல்லூரி நலன்விரும்பிகளின் பெரும் ஆதரவோடு சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினுடாக CWN மீண்டும் அதே தரத்துடன் புத்துயிர் பெற்றுள்ளது.
மிகக்குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டங்கள் CWN வலையமைப்பினரின் மிகச்சிறந்த திட்டமிடுதலின் மூலம் மிகத்துரிதமாக நிறைவு பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Photos – CWN