வடகிழக்கு பருவப் பெயர்சிக் காலத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கும் யாழ் தீபகற்பத்தில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதேபோல் யாழ்மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கின்றது. தொடர் மழை காரணமாக வீதிகளில் வெள்ளத்தினை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து தொண்டைமானாறு வரையிலான பாக்கு நீரிணையின் கரையோரப் பிரதேசங்களில் வழமைக்கு மாறான அதிகமான காற்றினால், அதிக மற்றும் உயரமான அலைகளையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.