வல்வை செய்திகள்

தேசியத்தலைவருக்கு இன்று அகவை ஐம்பத்தெட்டு

தேசியத்தலைவருக்கு இன்று அகவை ஐம்பத்தெட்டு 

ஐம்பத்தினாழு கார்த்திகையில் பூத்த பூமகனே
இன்று உனக்கு அகவை ஐம்பத்தெட்டு
வல்வை மண் பெற்றெடுத்த கண்மணியே
வரலாற்று நாயகன் கரிகாலனே
இன்று உனக்கு வயது ஐம்பத்தெட்டு
தேசத்தின் புதல்வன் பெருமகனே
தேசியத்தீ தலைவன் பிரபாகரனே
இன்று உனக்கு அகவை ஐம்பத்தெட்டு
உலகத் தமிழரை ஒன்றிணைத்த தலைவனே
உலகம் போற்றும் உயர்ந்த தலைவனே
இன்று உனக்கு அகவை ஐம்பத்தெட்டு
பன்னாட்டு படையும் உனைப்பார்த்து நடுநடுங்க
படை பல நடத்தியே தளபதியே
இன்று உனக்கு அகவை ஐம்பத்தெட்டு
அகவை ஐம்பத்தைந்தில் உனை சூழ்ந்த இருள்
அகவை ஐம்பத்தெட்டுடன் வெளிக்கட்டும் தலைவனே
“மீண்டும் வருவான் எம் தலைவன்
இன்னும் பல அகவை காணுவான் எம் தலைவன்”

வல்வையூர் குட்டி

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *