யாழ் பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் நேற்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
பல்கலை வளாகத்தில் கலைப்பீடம், விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பீடங்களிலும்,மாணவர் ஒன்று கூடும் இடம், சிற்றுண்டிச்சாலை, அறிவித்தல் பலகைகள், என பல இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
அந்த சுவரொட்டிகளில் பின்வருமாறு வாசகங்கள் காணப்படுகின்றது.
”போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறப்போவதில்லை”,
“எத்தனை தடைகள் வரினும் எமது மாவீரரின் இலட்சியத்தை மீட்டெடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்”,
“விழ விழ எழுவோம் புலிகளின் வீரத்திற்கு எல்லை உண்டா?’’
அண்ணனின் வழியில் நின்று தமிழீழத்தை நாம் மீட்போம்” போன்ற வீர வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றது,
அந்த சுவரொட்டிகளின் கீழே தமிழீழ இளையோர் அமைப்பு, புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” மாணவர்களின் இத்தகைய செயற்பாடானது யுத்தம் முடிந்த பின்னரும் அவர்கள் தமிழீழம் பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருப்பதனை எடுத்து காட்டுகின்றது,
அத்துடன் இலங்கையில் இராணுவத்தினர் மாவீரர் நாளை குழப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்ற இந்த வேளையிலும் மாணவர்கள் மாவீரர் வாரத்தை நினைவுகூரும் முகமாக இதனை செய்து வருகிறனர்.
அண்ணனால் ஊட்டி வளர்க்கப்பட்ட உணர்வும் வீரமும் இன்னும் சாகவில்லை என்பதனை மாணவர்கள் மீண்டும் ஒருமுறை நிருபித்து காட்டியுள்ளனர்.
எமது தமிழீழ மக்களே!
மாணவர்களின் இத்தகைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் வீடுகளிலும், ஆலயங்களிலும், மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான முறையில் 27/11/2012 அன்று மாலை விளக்கேற்றி எமது மான மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
எமது மக்களின் சுதந்திரமான நிம்மதியான வாழ்விற்காக தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் வீர மறவர்களை என்றும் எம் நெஞ்சங்களில் நிறுத்திக்கொள்வோம்!