லண்டனில் பிரசித்தி பெற்ற விம்பிள்டன் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் புதன்கிழமை (29/07/2015) நடைபெறவிருக்கும் பூங்காவனத் திருவிழா, வல்வை மக்களால் முன்னெடுக்கப்படுவது பற்றி முடிவு எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை (26/07/2015) ஞாயிற்றுக்கிழமையன்று வல்வை நலன்புரிச் சங்கத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
குறுகிய கால இடைவெளியில் அவசரமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடலுக்கு வந்திருந்தோரின்
ஏகமனதான முடிவின்படி பூங்காவனத் திருவிழாவை பிரித்தானிய வாழ் வல்வை மக்களால் விமரிசையாகச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டு கோவில் நிர்வாகத்தினருடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
எனவே வல்வை மக்களால் வெகு விமரிசையாக நடாத்தப்படவிருக்கும் பூங்காவனத் திருவிழா புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
மேலும் வல்வை மக்களின் பேராதரவுடன் வல்வை நலன்புரிச் சங்கத்தினர் South west பகுதியில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் வரும் 14ம் திகதி ஜனவரி மாதம் 2016ம் ஆண்டு (14/01/2016) அன்று உருவாக்க அனைத்து ஏற்பாடுகளையும் முன்னேடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்வுகளுக்கு : ரிஷி : 0789 0185111 பகீர் : 07949 099256
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)