வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 48வது ஆண்டு விழாவும் பாலர் தின விழாவும் 02.08.2015
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 48வது ஆண்டு விழாவும் பாலர் தின விழாவும் 02.08.2015 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு. பூ.அகமணிதேவா் அவா்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்விற்கு கணபதி படிப்பகத்தின் முன்னாள் தலைவரும், சமாதான நீதவானுமாகிய திரு.ம.சங்கரகாந்திலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும் நிகழ்வுகளின் வரிசையில் கணபதி பாலர் பாடசாலைப் பாலர்களின் கலைநிகழ்வுகளும், பழைய மாணவா்களின் கலைநிகழ்வுகளும் நடைபெறும்.











