கிளிநொச்சியின் கிராமங்களில் கார்த்திகை தீபங்களை சப்பாத்துக் கால்களால் உதைந்த இலங்கைப் படையினர்:-

கிளிநொச்சியின் கிராமங்கள் பலவற்றில் மக்கள் தமது சமய அனுஸ்டானங்களின் படி இன்றைய கார்த்திகை தீபத் திருநாள் நிகழ்வுகளை அனுஸ்டித்துள்ளனர். அதன்படி வீடுகளின் முற்றங்கள் சுற்றுப் புறங்களில் வழக்கம் போல்  தீபங்கள் ஏற்றி இருந்தனர். இதனை பொறுக்க முடியாத இலங்கைப் படையினரும் புலனாய்வாளர்களும் சிவில் உடையில் துப்பாக்கிகள் சகிதம் சென்று மக்களை கடுமையாக மிரட்டியதுடன் சப்பாத்துக் கால்களால் தீபங்களை உதைந்து தள்ளியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்பு கொண்ட கிராமத்தவர் சிலர் தெரிவித்தனர்.

குறிப்பாக செல்வநகர் புதுமுறிப்பு கிராமங்களுக்கு  அருகிலேயே – கிளிநொச்சி மாவட்டத்திற்கு உரிய புலிகளின் துயிலும் இல்லம் அமையப்பெற்றிருந்ததால் வழமைக்கு மாறாக இந்தப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

விசேடமாக  செல்வாநகர், புதுமுறிப்பு, உதயநகர், டிப்போ வீதியின் இரு மருங்கு ஜெயந்தி நகர் உள்ளிட்ட கிராமப்புறங்களை இலக்கு வைத்த படையினர் அப்பகுதிகளில் ஏற்றப்பட்ட அனைத்து கார்த்திகை தீபங்களையும் துவசம் செய்ததாக கிராமப்புற மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.