முல்லைத்தீவின் அளம்பில் துயிலும் இல்லபகுதியில் உள்ள மரம் ஒன்றில் புலிக்கொடி பறந்துள்ளதை தொடர்ந்து படையினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் துயிலும் இல்லம் சிறீலங்காப்படையினரால் அளிக்கப்பட்ட நிலையில் மாவீரர் நாளான இன்று அளம்பில் துயிலும் இல்லப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் புலிக்கொடி கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் அச்சம் அடைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியின் வீதியால் செல்லும் அனைவரிடமும் இதுதொடர்பில் படையினர் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.