மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள துறைநீலாவணை கிராமத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீடுகளுக்கு முன்பாக ஏற்றப்பட்ட விளக்குகளை படையினர் உடைத்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை இந்துக்கள் தமது வீடுகளுக்கு முன்பாக மண்சிட்டிகளில் தீபமேற்றி வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர். இதனை பொறுக்க முடியாத படையினர் வீடுகளின் முன்பாக வைத்திருந்த விளக்குகளை உடைத்து எறிந்துள்ளனர்.
இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.