வல்வை நேதாஜி, வல்வை றெயின்போ வி.கழகங்கள் வெற்றியீட்டின

வல்வை நேதாஜி, வல்வை றெயின்போ வி .கழகங்கள் வெற்றியீட்டின. வல்வை ஊக்குவிப்பு குழுவினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில்  நடாத்தப்படும் உதைபந்தாட்ட தொடரில் இன்று இரு போட்டிகள்  வல்வை நெடியகாடு இளைஞர் வி . கழக மைதானத்தில் நடைபெற்றன.

முதலாவது போட்டியில் வல்வை சைனீஸ் வி .கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி வி. கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் நேதாஜி வி. கழகம் 4 : 1 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது. இரண்டாவது போட்டியில் வல்வை திருவில் வி .கழகத்தை எதிர்த்து வல்வை றெயின்போ வி . கழகம் மோதியது. ஆட்டமுடிவில் இரு அணிகளும் கோல் போடாத காரணத்தினால் தண்டஉதையினை நடாத்த நடுவர்கள் தீர்மானித்தனர். தண்டஉதையில் றெயின்போ வி . கழகம் 3 : 2 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் முடிவுகள் பின்வருமாறு,

வல்வை ரேவடி vs வல்வை  இளங்கதிர் 3 : 2 என்ற  கோல்கணக்கில் ரேவடி வி. கழகம் வெற்றியிட்டியது.

வல்வை உதயசூரியன் vs வல்வை றெயின்போ – தண்ட உதையில் றெயின்போ வி. கழகம் வெற்றியிட்டியது.

Leave a Reply

Your email address will not be published.