ஈழக்கோரிக்கை தொடரும் வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடரும் என முன்னாள் இந்திய உயர் இராணுவ அதிகாரி ரவி பல்சோகர் தெரிவித்துள்ளார். ஈழக் கோரிக்கை தொடரும் வரையில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலைவருக்கும் பதிலீடுகள் உருவாகக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கடமையாற்றிய இந்திய அமைதி காக்கும் படையில்ழ பல்சோகர் மிக முக்கிய பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்சோகர், இந்திய அமைதி காக்கும் படையினரின் செயற்பாட்டு இலக்குகள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடிக்கும் வகையில் இந்திய அமைதி காக்கும் படையினர் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளின் பலத்தை பகுதியளவில் குறைக்கும் வகையிலேயே இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் அமையப் பெற்றிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பணியாற்றிய இந்திய அமைதி காக்கும் படையணியின் ஏழாம் படையணிக்கு பிரிகேடியர் பல்சோகர் தலைமை தாங்கினார்.
உயர் மட்ட அதிகாரிகளின் பலவீனமான தந்திரோபாய வகுப்புக்களே இலங்கையில் வெற்றிகரமாக அமைதி காக்கும் பணியை முன்னெடுக்க முடியாது போனமைக்காக பிரதான ஏதுவென பல்சோகர் தெரிவித்துள்ளார்.
அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் அமையப் பெற்றிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பணியாற்றிய இந்திய அமைதி காக்கும் படையணியின் ஏழாம் படையணிக்கு பிரிகேடியர் பல்சோகர் தலைமை தாங்கினார்.