தமிழீழத்தில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமைக்காக சிங்கள இனவாத அரசின் ராணுவத்தால் தமிழ் மாணவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை கண்டிக்குமுகமாகவும் பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காகவும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு அனைத்து பல்கலைக்கழக ஒன்றியங்களையும் சேர்த்து மாபெரும் ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றினை பிரித்தானிய பிரதமர் அவர்களின் வாசல் தளத்திற்கு முன்னால் வருகின்ற செவ்வாய்கிழமை (04/12/2012) மாலை 05 .00 மணி தொடக்கம் 19 .00 மணி வரை நடைபெறும்.
இவ் போராட்டதிற்கு எங்களது இளைய சமுதாயமும் எங்களது மக்களும் வருகை தந்து இதனை வெற்றிபெற செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு எங்களது இணையதளத்தை பார்வையிடுங்கள்.
Media Team
Tamil Youth Organisation – United Kingdom
Web: http://www.tyouk.org
Follow us: http://twitter.com/#!/TYOUK
Face Book: http://www.facebook.com/tyouk.media