இலங்கையின் 15 ஆவது பாராளுமன்றத் தேர்தல்
இலங்கையின் 15 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பேரை நேரடியாக தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை சேர்ந்த 6,151 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.