வல்வை ரேவடி வி . கழகம் இறுதியாட்டத்தில் வெற்றிபெற்றது. வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் மற்றும் மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இன்று (ஞாயிற்றுகிழமை ) வல்வை நெடியகாடு இளைஞர் வி . கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வல்வை நேதாஜி வி . கழகத்தை எதிர்த்து வல்வை திருவில் வி . கழகம் மோதியது. ஆட்டமுடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களை போட்டதனால் தண்டஉதையின் மூலம் வெற்றி தோல்வியை தீர்மானிக்க நடுவர்கள் தீர்மானித்தனர். இறுதியில் தண்டஉதையில் நேதாஜி வி . கழகம் வெற்றியிட்டியது.
அடுத்து இறுதியாட்டம் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் வல்வை ரேவடி வி . கழகத்தை எதிர்த்து வல்வை ரெயின்போ வி . கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை ரேவடி வி . கழகம் 2 : 1 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது.