கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! (காணொளி)


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமையை கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் போது பொலீசாருக்கும்,மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற வன்முறைகளை கண்டித்தும், அதன் பின்னர் யாழ். பல்கலைகழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(03.12.2012) காலை 11.00 மணியிலிருந்து தற்போது வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வீதியோரத்தில் நடைபெற்றுவரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ‘மாணவர்களை கைது செய்யாதே’ ‘இதுதான் இலங்கையின் ஜனநாயகமா?’ ‘கற்க வந்த மாணவர்களை எதற்கு தாக்கினாய்’ ‘கைது செய்த மாணவர்களை விடுதலை செய்’ ‘இராணுவமே மாணவர் விடுதிக்குள் உனக்கென்ன வேலை’ ஜனநாயக நாட்டில் அராஜகம் எதற்கு’ போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கைது செய்த மாணவனை விடுதலைசெய் என்ற கோசங்களுடன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.