யாழ். பல்கலை மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்:வைகோ கண்டனம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மாவீரர் தினத்தையொட்டி நவம்பர் 27-ம் திகதி வீர வணக்கத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை சிங்கள ராணுவத்தினர் தாக்கியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.கார்த்திகை நாளையொட்டி முருக வழிபாடு நடத்தும் தமிழர் வீடுகளில் ஏற்றப்பட்ட தீபங்களை இராணுவத்தினர் எட்டி உதைத்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு அமெரிக்கத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு என் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இனத்தையே அழித்துவிடலாம் என்ற மூர்க்கத்தனமான வெறியோடு சிங்கள இராணுவத்தினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக மக்களைக் காக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.