நெடியகாடு பிள்ளையார் தீர்த்தத் திருவிழா நிறைவு (படங்கள் இணைப்பு)
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நிறைவெய்தியது.
நேற்று காலை சுமார் 7 மணியளவில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து சுமார் 0730 மணியளவில் விநாயகப் பெருமான் இதர சுவாமிகள் சகிதம் தீர்த்தம் ஆடுவதற்காக வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரை நோக்கி புறப்பட்டார். இதனைத் தொடர்ந்து தீர்த்த உற்சவம் சுமார் 0830 மணியளவில் நிறைவெய்தியது.