வல்வெட்டித்துறை மாணவன் கடத்தல் – ஆணைக்குழுவில் முறைப்பாடு.

வல்வெட்டித்துறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பாடசாலை மாணவனை படைப்புலனாய்வாளர்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற நிலையில் குறித்த மாணவனைக் காணாத பெற்றோர் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை ஊறணி பகுதியைச் சேர்ந்த அருலம்பலம் கிசோக்ராஜ் என்ற 19வயது பாடசாலை மாணவன் நேற்றய தினம் குடி தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளான். எனினும் அவன் மாலை வரையில் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் குறித்த மாணவனை தேடிய வீட்டார் இன்று காலை வல்வெட்டித்துறை பொலிஸிலும், யாழ்.மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

இன்று குறித்த மாணவனின் வீட்டிற்கு வந்த புலனாய்வாளர்கள் மாணவனை தாமே கைது செய்ததாக தெரிவித்திருப்பதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.