யா / வல்வை சிவகுருவித்தியாசாலையில் இடம் பெற்ற நான்கு ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (வியாழக்கிழமை ) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆசிரியர்களின் விபரம் பின்வருமாறு,
1. திரு. வி .விநாயகமூர்த்தி – இவ் ஆசிரியர் விஞ்ஞான பாடத்தினை கற்பித்தவர், கொற்றாவத்தை தமிழ் கலவன் பாடசாலைக்கு இடமாற்றப்படுகின்றார்.
2. திருமதி .வஷ்சலா விஜயபிரகாஷ் – இவ் ஆசிரியை ஆரம்பப்பிரிவுக்கு கற்பித்தவர், இவர் மேலதிக பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு செல்கின்றார்.
3. திருமதி. நந்தா மணிராஜ் – இவ் ஆசிரியை ஆரம்பப்பிரிவுக்கு கற்பித்தவர், இவர் மேலதிக பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு செல்கின்றார்.
4. செல்வி .யோ . சரண்யா – இவ் ஆசிரியை கணணி பாடத்தினை கற்பித்தவர். இவர் வெளிநாடு செல்கின்றார்.
பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து கௌரவித்தனர்.