யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பற்ற நடத்தையினை கண்டித்து பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர்கள் சங்கம் இன்று கண்டன எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தரது பிரதான அலுவலகம் முன்பதாக குவிந்த அவர்கள் தமது கைகளில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கெதிரான சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். முன்னதாக குறைவான ஆட்களே ஒன்று திணை;ட போதும் பின்னர் பலரும் ஒருங்கிணைந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
மாணவர்கள் சிறைகளில் நிர்வாகமோ சுற்றுலா விடுமுறையில் பல்கலைக்கழகமென்ன கோமாளிகளின் கூடாரமா என பல கோசங்களை தாங்கிய பதாதைகள் அங்கு பிடிக்கப்பட்டிருந்தன. நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையே மாணவர்கள் சிறைகளில் வாடக்காரணமென குற்றம் சாட்டிய போராட்டகாரர்கள் மாணவர்களது விடுதலையின்றி பகிஸ்கரிப்பை கை விடும்பேச்சிற்கே இடமில்லையெனவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே மாணவர்களது விடுதலை மற்றும் சுமுகமான சூழ் நிலையொன்றை ஏற்படுத்து தொடர்பாக ஜனாதிபதிக்கு மகஜரொன்றை அனுப்பவும் அவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
குறிப்பாக கலை மற்றும் ஏனைய பீட மாணவர்களே வன்முறைகளுக்கு பின்னாலிருப்பதாக மருத்துவ பீடாதிபதி உள்ளிட்ட சில தரப்புகள் பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் விஞ்ஞான பீட ஆசிரியர்களது முன்மாதிரியான போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக மருத்துவ பீட மாணவர்களை அழைத்து சென்று இராணுவப் புலனாய்வுப்பிரிவினரிடம் மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன் மற்றும் விரிவுரையாளர்களான வைத்திய அதிகாரிகளான ரவிராஜ் மற்றும் முகுந்தன் தொடர்பில் பல்கலைக்கழக சூழலில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.