வல்வை செய்திகள்

பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாடசாலை சமூகத்தினரின் கெளரவிப்பு நிகழ்வு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் வல்வெட்டித்துறை வீராங்கனைகள் தசாந்தினி இராமகிருஸ்ணன், கோ.யோகேஸ்வரி ஆகியோர் 3ம் இடத்தையும் அ.சிந்து 4ம் இடத்தையும் பெற்று வல்வெட்டித்துறை மண்ணுக்கும் சிதம்பராக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டி திங்கட்கிழமை பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் 80 க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வல்வை சிதம்பராக் கல்லூரியின் ஏற்பாட்டில் கெளரவிக்கும் நிகழ்வு இன்று (25.09.2015)காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *