வல்வை செய்திகள்

மைலோ கிண்ண உதைபந்தாட்டம் முதல் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது

2015 ஆம் ஆண்டிற்கான மைலோ வெற்றிக் கிண்ணத்திற்கான யாழ் மாவட்ட விளையாட்டுக்கழகங்களுகிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று 10 ஆம் திகதி நெற்கொழு மைதானத்தில் ஆரம்பமானது. இதில் 100 அணிகள் பங்குகொள்கின்றன.
யாழ்ப்பாணத்தில் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்கான போட்டிகள் மூன்றாவது முறையாக நடத்தப்படுகின்றன. வல்வை விளையாட்டுக் கழகம் எதிர் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதி 1 – 0 என்ற கோல்கணக்கில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. நாளை பலாலி விண்மீன் அணியை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *