நேற்றைய தினம்(11.12.2012), பிரித்தானியாவில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்தை திடீர் முற்றுகைக்கு உள்ளாக்கிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், யாழில் பல்கலைக் கழக மாணவர்களை விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்தனர். இவ்விடையத்தில் பிரித்தானியா உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாலை ஆரம்பித்த இக் கவனயீர்ப்பு போராட்டம் பல அதிகாரிகளையும், பொதுமக்களையும் கவர்ந்துள்ளது. ஈழத்தில் மாணவர்களின் இன்றைய நிலையை பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் உள்ளோர்கள் கவனத்திற்கு கொண்டுவரவே இப் போராட்டம் நடைபெற்றதாக மேலும் தெரிவித்துள்ளனர்.













Leave a Reply