என்று உன் வீடிற்கு வந்தாலும்
எழுந்து வந்துவரவேர்க்கும் நீ ,
இன்றுமட்டும்
இப்படி உறங்குகிறாய் ?
எழுந்து வாங்கள் குடும்பத்தினர் என
ஏக்கமாய் அழைக்கிறோம் ,
எதையும் காணததுபோல்
எழுந்துவர மறுக்கிறாயே ! கள்ளமில்லா உன் முகத்தை
கட்டிலிலே கண்டவேளை
கலங்கி நின்றே எண்ணிக்கொண்டோம்
கயவன் அந்த கடவுள் என்று…
நீ ஒருமுறை மரணித்தாய் – இனி
உன் நினைவுகள் வரும் நேரங்களில் – நாங்கள்
ஒவ்வொரு முறையும் மரணிப்போமே..
நீ எங்களைவிட்டு செல்லவில்லை
எங்கள் நினைவுகளில் தங்கிவிட்டாய் .
உன் ஆன்மா சாந்திகொள்ள
தமிழன்னை அவள் தயை புரிவாள் ………. குடும்பத்தினர் ஆதிகோவிலடி வல்வெட்டடித்துறை
