கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்தேசியக் கூட்டமைப்பு இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது. படையினரின் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பெருமளவு படையினரும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்தேசியக் கூட்மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன்,செல்வம் அடைக்கலநாதன், சிவசக்கி ஆனந்தன், ஆகியோரும், தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அதன் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் புளொட் தலைவர் சித்தார்த்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா, புதிய மாக்ஸிச லெனினிய கட்சியின் செயலாளர் செந்திவேல் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
‘கைதான மாணவர்களை உடனே விடுதலை செய்இ நிலத்தை ஆக்கிரமிக்காதே, மத முரண்பாட்டை தோற்றுவிக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.