Search

நாம் வல்வையர் – புலம்பெயர்ந்த வல்வைர்களின் லண்டன் வல்வையர் நலன் புரிச்சங்கம் 15.11.2015 கூட்டம் பற்றிய தற்போதைய போசகரில் ஒருவர் சோ. செல்வச்சிவம் தெய்வச்சந்திரன் சிந்திப்புக்ள்.

நாம்  வல்வையர் – புலம்பெயர்ந்த வல்வைர்களின்  லண்டன் வல்வையர் நலன் புரிச்சங்கம் 15.11.2015 கூட்டம் பற்றிய
தற்போதைய போசகரில் ஒருவர் சோ. செல்வச்சிவம் தெய்வச்சந்திரன் சிந்திப்புக்ள்.
1) சிதம்பரா கணிதப்போட்டி
2) எழுந்தருள இருக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலுக்கான புதிய நிர்வாகக் குழு அமைத்தல்
3) புதிய கட்டிடம் வேண்டுவது அனைத்து வல்வை மக்களும் வருகை தந்து உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி நல்ல தீர்மானங்களை எடுத்து வல்வையை வளர்த்திடுவோம்.
காலம் :   15.11.2015  ( ஞாயிறு)         நேரம்  :   6.00 pஅ – 9.00 pஅ பொதுக் கூட்டம் நடைபெறும்
தொடர்வுகளுக்கு : ரிஷி   07890185111 –
லண்டன் வல்வையர்களால் உலக வல்வையர் ஒன்றியம் ஆரம்பித்த போது குடும்பமாக குழந்தைகள் இளைஞர்கள் இளைஞ்சிகள்  நிறைவாக  பெண்கள் நிறைந்த கூட்டமாக சமூகம் அளித்து இருந்தார்கள். அது போல் இன்றும் முத்துமாரியின் அருள் பெற ஆரம்ப நிகழ்வுக்கு;  நிறைவாக  பெண்கள் நிறைந்த கூட்டமாக சமூகம் அளித்து முத்துமாரியின் கடாச்சம் பெறுங்கள்.
வல்வைக்கு ஒரு  சில வருடங்களுக்கு முன்  என் விஜயத்தின் போது வல்வையின் அவல நிலைகளில் ஒன்றான சிதம்பராக்கல்லூரின் அவலநிலையை ஆவணப்படுத்தியிருந்தேன். பின்னர் என் மதிப்புக்குரிய சுவாமி இராஜேந்திரா அவர்கள் வல்வைக் கல்லூரிகளுக்கு விஜயம் செய்து அன்பளிப்புக்கள் நன்கொடைகளை தனது மகன் மூலம் வழங்கியிருந்தார். இவர்கள் வல்வைக்கல்விமன்றம் ஆரம்மாவதற்கு முன்னர் எமது நட்பு வட்டாரத்துக்கு இரவு பகல் பாராது அதிகாலை 4மணிக்கு எம் கூட்டுப்படிப்பில் எழுப்பி எந்த சுயநலனும் நோக்கமாக இல்லாமல் எமக்கு போதித்தவர். இவரிடம் மெக்கானிக்கல் ரோயிங் பாடம் கற்று ராஸ்மென் பரீட்சைக்கும் சமூகம் அளித்து இருந்தேன். சில நண்பர்கள் கப்பல் கப்ரீன்காக இரத்த கொடை வள்ளல்களாக வலம் வருகின்றார்கள்.
மாஸ்டர்; அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு வல்வை சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய பணிகள் பற்றி ஆலோசித்தார். நாம் லண்டனில் வல்வை நலன் புரிச்சங்கமாக ஊர்க்கடமைகளை செய்கின்ற நிர்வாகக் அங்கத்தவர்களுடன் ஆலோசித்து சிதம்பரா நலன்புரிவோர் என்ற அமைப்பை உருவாக்கின்னோம்.
அன்றும் இன்றும் என்றும் சிதம்பரா நலன்புரிவோர் அமைப்பு லண்டன் வல்வை நலன்புரிச்சங்கத்தின் அமைப்புக்குள் இயங்குவதுதான் புலம்பெயர் வல்வை சமுதாயத்துக்கு நல்லது.
காரணம் இவ்வருடம் நடாத்தப்பட்ட சிதம்பராவின் பரிசளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டதால் சென்றிருந்தேன். என் போல் அழைக்கப்பட்ட பல நலன்விரும்பிகள் பிரிவினைகளை நோக்கிய செயல்பாடு என கருதி பலர் விழாவுக்க செல்லவில்லை.
அவ் விழாவில் வல்வையர்கள் அல்லதவர்கள் மைக்பிடித்து நிகழ்ச்சி நிரலை ஒழுங்கு படுத்திக்கொண்டுஇருந்தார். அவ்விழாவில் அவர் சிதம்பரம் பாடசாலை என்றோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள். மேடையிலும் விழாவையும் செயல் படுத்திக்கொண்டு இருந்தவர்கள் கவனத்துக்கு ஏன் வரவில்லை. மைக் பிடித்து பேசக்கூடிய வல்வையர்கள் உங்களிடம் இல்லை என்றால் விழாவை நடத்தக் கூடிய தகுதி  அந்த நிர்வாகத்துக்கு இல்லை.
லண்டன் வல்வையர்களுக்குள் பந்தடிக்குள் ஏற்பட்ட மிச்சம் புளுஸ் சொச்சம் புளுஸ் என்று ஏற்பட்ட பிரிவினைதான் லண்டன் வல்வையர்களை 15 வருடம் பின்நோக்கி வைத்திருக்கின்றது.
சிதம்பராக்கல்லூரியின் பெயரால் எமக்குள் பிரிவினை வேண்டாம்.
இனி வருங்காலங்களில் லண்டன் வல்வையர்கள் எடுக்கப்படும் நல்ல முயற்;சிகள் நலன்புரிச்சங்க லோகோவுடன் இணைத்து மாஸ்டர் காட் விசாகாட் லோகோ போல் அவர்அவர் செய்ல் பாடுகளை செய்வோமாயின்  எமது எல்லா வெற்றிகளும் நிச்சயம். எமது செயல் பாடுகளுக்கு கார்ள்மாக்ஸ் லெனின் புத்தகங்களை நாடிச்செல்லத்தேவையில்லை கடந்த கால 30  வருட மண் அனுபவம் போதுமானது.
2) லண்டனில் முதல் கோயிலாக அமைந்த விம்பிள்டன் விநாயகர் ஆலயத்தில் 1990 தொடக்கதத்திலிருந்து வல்வை முத்தமாரிக்கு சித்திரை பௌர்ணமியில் இன்று வரை வல்வையர்களால் அபிசேகம் கற்பூரத்திருவிழா நடைபெற்று வருகின்றது. அபிசேகத்துக்கு  வரும் வல்வையர்கள் பலர் வருடாவருடம்  தெற்பை போட்டு வல்வை மக்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். அதன் பின்னர்தான் லண்டன் வல்வையர்கள் பெரும் பகுதியாக வசிக்கும் ருட்டிங்பகுதியில் முத்துமாரிமாரி கோயில் ஆரம்பம் ஆகியது. ஆரம்பத்தில் பல வல்வையர்கள் சகல உதவிகளையும் செய்து கோயிலை வளர்த்தார்கள். படிப்படியாக பலர் வெளியேற்றப்பட்டார்கள். அவர்களில் ஒருவராக மணி அவர்கள் புறிம்பாக சிவன் கோயிலை ஸ்தாபித்து சுவாமிக்கு தானே அலங்காரங்கள் செய்து சிறப்பாக இயங்கினார். அதிஸ்டத்தால் இரண்டாவது அம்மன் கோயிலையும் ஸ்தாபித்து சித்திரையில் முத்தமாரிக்கு திருவிழாக்களும் நடைபெற்து. இக் கோயிலுக்குத்தான் அரசாங்க சலுகைப்பணமும் கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்போது கோயில் சில நேரங்களில் பூட்டி இருப்பாக திரும்பியவர்கள் குறைபட்டுக்கொள்கின்றார்கள்.
இவ் வேளையில் என் சிந்திப்புக்கு வருகின்றேன்.   வல்வை மக்களுக்கு புது வருடப்பி;றப்புக்கு மருத்துவ நீர் வழங்கும் புறவிசர் செல்லப்பா பேரன் ராஜ்குமார் அவர்கள் கனடாவில் தனியாக ஆரம்பிக்கப்பட்ட கோயில் வல்வை மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு கடன்கள் நிவர்த்தி செய்யப்பட்டு சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
தற்போது லண்டன் முத்துமாரி கோயிலுக்கு உரிமையான திரு நந்தலால்நேரு அவர்கள் வல்வை நலன்புரிச்சங்த்திடம் ஏன் வழங்கக் கூடாது என்று ஜயப்பாடான கேள்விகள் வல்வையர்கள் மனதில் எழுகின்றது.
லண்டனில் வல்வையர்கள்  தனிஒருவர் 24 வீடுகளுக்கும் 350 போருக்கு தொழில் வழங்குனர்களாகவும் சொந்தமாக பெற்றோல் நிரப்பு நிலையங்கள் கடைகளுக்கு சாமான்கள் வழங்கும் காஸ்அன் கரிகள் பெருவாரியான சீட்டுதாச்சிகள் என்று நிறைய பணப்புழக்கம் உள்ளவர்கள் லண்டனில் 60 க்கு மேற்பட்ட கோயில்கள வந்த பிற்பாடும் எமக்கான கோயிலைப்பற்றி இன்று சிந்திப்பது வெட்கமாக இருக்கின்றது.
3) எமக்கான புதிய கட்டிடம் பல சந்தர்ப்பங்களில் நாம் முயற்சிகள் மேற்கொண்டு தளர்வடைந்து இருந்தோம். எமதூர் குட்டிமணியண்ணா அவர்கள் ஆரம்ப காலங்களில் கனடா லண்டன் என்று வந்து நாம் வல்வையர்கள் முகவரிகளை தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம் எமது பூர்வீகம் பற்றி வெளிநாட்டு;  அறிஞர்கள் ஆராயமுற்படும்  போது நாம் அதற்கு தகுதியானவர்களாக  இருக்கவேண்டும் என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தோம். அப்போது சரியாக 34பேர் பிரசன்னமாக இருந்தோம். அங்கு அமைக்கப்பட்ட மையக்குழுவில் 5பேரில் ஒருவராகும் பாக்கியம் கிடைத்தது. பெரும் பணச்செலவில் வெளி நாடு வந்தது வேலைப்பிரச்சனை.. இப்படியாக முடங்கி விட்டோம்.
பின்னர் பல வருடங்களுக்கு பிறகு வல்வை அன் கோ என்ற ஸ்தாபனம் சபா .இராஜேந்திரன்  அண்ணாவால் பல கூட்டங்கள்  பத்திரிகை அச்சிட்டு பல படிகள் முன்னேறி இருந்தோம். பல வல்வை இளைஞர்கள் புதிதாக பெரும் பணச்ச செலவில் வந்த நேரம். எமக்காhன சொந்த கட்டிடம் தேவை பிற்காலத்தேவைக்கான சிந்திப்பு எம் பலரிடம் இருக்கவில்லை.
பெரும் எடுப்பில் உலக வல்வையர் ஒன்றியம் இங்கிலாந்திலும் பின்னர் டென்மார்க்கில் ஸ்தாபித்து இருந்தோம். டென்மார்க் ஒன்றிய ஆரம்பவிழாவுக்கு கென்னடி தம்பதிகளுடன் நானும் செல்லும் பாக்கியம் கிடைத்தது. டென்மார்க் வல்வையர்கள் 11வருடங்கள் கடந்து சில வல்வையர் வரலாறுகளை பதிந்து கொண்டிருக்கின்றார்கள். லண்டன் வல்வை ஒன்றியம் ஏன் செத்தப்போனது என்பது பற்றி எனக்கு ஆண்டவன் நிறைய ஆயுளை கொடுத்தால் பிறகு சிந்திக்கலாம் கெட்டவைகளை மறப்போம் மன்னிப்போம்.
வல்வை ஒன்றிய பாடசாலை 34 பேருன் ஆரம்பிக்கப்பட்டு நூ~ற்;றம்பது மாணவர்களை தாண்டி சிறப்பாக இயங்கிய வேளையில் பறித்தெடுக்கப்பட்டு தென்மேற்கு பாடசாலை என்றுபெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று 400 க்கு அதிகமான மாணவர்களுடன் இங்குகின்றது.
இப்பாடசாலைக்கும் காரியாலையத்துக்கும் 12 பேர் சிறப்புட்ன் வாழ்ந்தவர்களுடன் பண உதவி கேட்டு சென்ற போது 3பேர் மட்டும்  பண உதவி செய்தார்கள்.
100 பவுன்ஸ் படி ஆயுள் அங்கத்தவர்கள் சேர்த்த போது 7பேர் மட்டும் சேர்ந்து கொண்டோம். இந்த ஆவணம் தற்போதைய சங்கத்திடம் இருக்கின்றதா?.
இன்று கந்தசஸ்ட்டி காலம் காலையும் மாலையும் கோயில் செல்லும்  வயது  கடந்த மூன்று நாள் பூசையிலும் ஒரு கையில் உள்ள விரல் எண்ணிக்கைக்கு குறைவான வல்வையர்களே வந்தார்கள்.  எமக்கான கோயிலைப்பற்றியும் சிந்திக்கின்றோம்.
லண்டன் வல்வையர் நலன்புரிச்சங்கம் சங்கத்துக்குள் உள்ளவர்களுக்கா? பொது மக்களுக்கானதா?. சங்கவரலாற்றில் ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் புகைப்பிடிப்பாளர் சந்திரண்ணா போன்ற நாலுபேர் பிணங்களாக இருந்த போதும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதை ஒரு வல்வையின் விசுவாசி போனில் கேட்டார் ஒருகேள்வி மாமாச்சி நாளைக்கும் உங்களுக்கும் இதே நிலைதான்.
நாளைய கூட்டம் பதில் சொல்லும்.
கட்டுரையின் முடிவாக
 நலன்புரிச்சங்த்தடன் இன்னும் உள்வாங்கி இரட்டைச்சின்னங்களுடன்
1. சிதம்பரா நலன் புரிவோர் அமைப்பு
2. வல்வை மகளிh அமைப்பு
3. வல்வை முதியோர் அமைப்பு
4. வல்வை இரவுக்கழகம்
5. வல்வை இசைக்குழு
6. வல்வையர் அரசியல் பிரிவு
7. கோடை விழாக்குழு
8. வல்வையர் ஒன்று கூடல் குழு
9. உதைபந்தாட்டக்குழு
10. கிரிகெட் குழு
11. வலை பந்தாட்டக் குழு
12. மேன் பந்தாட்டக் குழு
13. மாலுமிகள் சங்கம்
14. மணப்பந்தல் சேவை.
15. சுற்றுலாக்குழு
இப்படியாக இணைந்து செல்லலாம் என்ற எழுத்து மூலமாக வல்வையர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். கூட்டத்திற்கு செல்லும் அக்கறை உள்ளவர்கள் எழுத்து மூலமாக சமர்ப்பித்து இணையத்தளம் மூலம் மீண்டும் பகிர்ந்து மீண்டும் கூடி 15 வருட பின்னடைவை நிவர்த்தி செய்வோம்.
வல்வையில் மாலை ஆறுமணிக்கு பிறகு எந்த வியாபாரியும் எவனும் வல்வையில் தங்க முடியாது என்ற எழுதாத சட்டத்துடன் வாழ்ந்த பரம்பரையினர் நீங்கள் என்பதை நினைவுட்டி நிறைவு செய்கின்றேன்.
வல்வையர் நாம் எமது ஓர்மம் உலகத்துக்கு நீருபிக்கப்பட்டது.
வாழ்வோம் வரலாற்று பதிவாக
சோமசுந்தரம் பூட்டன்
செல்வச்சிவம் தெய்ச்சந்திரன்.Leave a Reply

Your email address will not be published.