வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சங்கரத்தை முருகன் கோவிலடியைச் சேர்ந்த அருள் ஜீவன் வயது(28) என்ற குடும்பஸ்தரே வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
வட்டுக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேரூந்துக்காக வட்டுக்கோட்டையில் காத்திருந்தார்.
இதன் போது வெள்ளை வானில் வந்த கும்பல் ஒன்று இவரை வானில் இழுத்து ஏற்றிச் சென்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்