Search

எங்கே இவர்கள்…?

இலங்கையில் தமிழரின் மிக முக்கியமான காலகட்டம் 2009 ம் ஆண்டு.

இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த இனவழிப்பு நடவடிக்கை உச்சகட்டத்தை தொட்டு நின்ற காலப்பகுதி அது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நியாயமான போர் நடவடிக்கைகளின் மூலமோ, அல்லது அரசியல் பேச்சுக்கள் மூலமோ அவர்களை வெற்றி கொள்ள முடியாது என்ற  உண்மையை புரிந்து கொண்ட சிங்கள பயங்கர வாத அரசு,அயல் நாடுகளின் பலமான துணையுடன் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற் கொண்டு விடுதலைப்புலிகளை அழிக்க முற்பட்டது.

இந்தக்காலப்பகுதியின் இறுதிப்பகுதியில் பெருமளவான இளைஞர்கள், யுவதிகள் சிறிலங்கா அரச பயங்கரவாத இராணுவக் காடையர்களினால் கைது செய்யப்பட்டு, கை,கால்கள், கண்கள் கட்டப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு  பற்றைகளுக்குள்ளும், கடல் மணல் பரப்பிலும் வைத்து அடித்தும் , சுட்டும் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பலரை  பிடித்து   விசாரணை  செய்யும் ஆவணப் புகைப்படங்கள் வெளி வந்துள்ள நிலையில் இவர்களுக்கு என்ன நடந்தது இவர்கள் எங்கே என்ற கேள்விக்கான பதிலையும் பொறுப்பையும்  சிறிலங்கா அரசே கூற வேண்டும்.

சர்வதேச போரின் விதிப்படி கைதானவர்களையோ, அல்லது சரணடைந்தவர்களையோ கொடூரமாக கொலை செய்ய வேண்டும் என கூறப்படவில்லை.

இன்று சிறிலங்கா அரசு  சரணடைந்த விடுதலைப்புலிகளை மனிதாபிமான முறையில் நடத்தியதாகக் கூறுகின்றது.

ஆனால் அதன் படைகளே தம்மால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தி வெளிப்படுத்தியுள்ளன.

எனவே இந்த ஆவணங்களை சரியாகப்பயன்படுத்தி தமிழ் இனத்தின் மீது போர்க் குற்றங்களைப்புரிந்த சிறிலங்கா பயங்கர வாத அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தமிழ் இனம் தனக்கான உரிமையை நிலை நிறுத்த முனைய வேண்டும்.

இல்லையேல் தொடர்ந்து தமிழ் இனம் மீது இதை விட மிலேச்சத்தனமான கொலைக்குற்றங்களை இந்த சிறிலங்கா பயங்கரவாத அரசு புரியும்.

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *