கோவில்கள் - திருவிழா வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை கிழக்கில் மிகபிரமாண்டமான விநோத சூரன் போர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளம் 17.11.2015

வல்வெட்டித்துறை கிழக்கில் மிகபிரமாண்டமான விநோத சூரன் போர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளம் 17.11.2015 பொலிகை கந்தவன ஆலயத்தில் சூரன் போர் சிறப்பாக நடைபெற்றது இங்கு மாயஜால யுத்தம் புரியும் காடச்சியும் வானவேடிக்கைகளும் தீப்பிளம்புகளுமாக பல அவதாரம் எடுத்து தாரகன், சிங்கன், நையாண்டி சிங்கன், வானகோபலன்,சூரன் என மாயம் செய்து கருனைக்கந்தனுடன் போர்புரிந்தான் கந்தன் அருளாசியினால் ஆயுதங்களை இழந்து ஆடை அணிகலன்களை இழந்து ஆணவத்தை இழந்து தனியாக வெக்கி குனிகுறுகி தோற்றுப்போய் கந்தன் முன் நின்றான் மீண்டும் ஆணவம் தலைக்கேர கந்தனுடன் போர் புரிந்தான் இறவாத வரம் பெற்றமையினால் மீண்டும் அவனை கொல்ல மாமரத்தினுள் ஒழிந்து கொண்டான் இதை உணர்ந்த முருகன் அவனது நெஞ்சை பிழக்க சேவலும் மயிலுமாக உருமாறுகின்றான் உருமாறிய சூரனை சேவலை தனது கொடியாகவும் மயிலை தனது வாகனமாக்கி அருளாட்ச்சி புரிரிந்தார் இதன் பொருள் மனிதர்களுடைய ஆணவம்-,சூரன் கன்மம்-சிங்கன் மாயை-தாரகன் அழிப்பதையும் அதாவது இவை அழிக்க முடியாதவை குறைக்கும் படலமாக அமைகின்றது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *