Search

பலியாடுகளாவது தமிழ்ப்பெண்கள் மட்டுமா? தொடரும் சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் கடப்பாடு யாருக்கு?

அண்மைய நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பெரும் பதற்றம் நிலவியது. இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு பேய்பிடித்துள்ளதாக சொல்லி அப்பெண்களை இராணுவத்தினர் மனநலப்பிரிவில் அனுமதித்திருந்தனர். அந்தப் பெண்களை பேய்கள்தான் பிடித்துச் சென்றனர் என்று வைத்திசாலையில் இருந்த மூதாட்டி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுத்தான் கொண்டுவரப்பட்டார்கள் என்று செய்தி உடனேயே வெளியானது. 13 பெண்கள் அவ்வாறு அனுமதிக்கப்ட்டிருந்தார்கள். யாரும் அந்தப் பெண்களை பார்க்க அனுமதிக்கப்படாமல் இராணுவத்தினர் காவல் செய்தார்கள்.

வன்னியில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் அண்மையில் நூறு பெண்களை இலங்கை இராணுவத்தில் இணைத்த நடவடிக்கையும் நிகழ்ந்துள்ளது. கிளிநொச்சியில் இந்த நடவடிக்கை பெரும் பதற்றத்தை உருவக்கியது. எல்லோருடைய வீட்டிலும் இந்தக் கதைதான் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. கிளிநொசசியில் மட்டுமல்ல உலகமெங்கும் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைந்தார்கள் என்ற பேச்சுத்தான் நடந்தது. அதுதான் இலங்கை இராணுவத்தின் திட்டமுமாக இருந்தது. எதற்காக இலங்கை இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைந்தார்கள் என்றூன் எல்லோரும் கேட்கின்றனர்.

நாம் தாய்வழிச்சமூதாயம். பெண்கள்தான் ஒரு சமூதாயத்தை உருவாக்குகிறார்கள். பெண்கள்தான் குடும்பத்தை கொண்டு நடத்துகிறார்கள். வுாழ்வு பெண்களிலிருந்து தொடங்கி அவர்களால் நிகழ்த்தப்படுகிறது. ஈழத்தில் இன்றைய சூழலில் போரில் பெண்கள் பலத்த இழப்புக்களுக்கு முகம் கொடுத்திருக்கிறார்கள். கணவனை, பிள்iயை, உறவுகளை இழந்து காணாமல  போகக்கொடுத்து பலவகையிலும் நலிவடைந்திருக்கிறார்கள். வன்னியில் போருக்குப் பிந்தைய வாழ்வில் அதிகமும் துயரங்களை சுமந்து வாழ்வுக்காக போராடும் பல பெண்களை தினமும் எங்கும் காணமுடியும். அழிவுக்கு முகம்கொடுத்த இனத்தின் பெண்களை பலியாக்குவதெனபது அந்த இனத்தை அழிப்பதற்குச் சமனாகும்.

ஒருமுறை கிளிநொச்சி நகரத்தில் பழைய பேரூந்து தரிப்பிடத்தின் முன்பாக புலிகளின் காலத்தில் சேரன் சுவையகம் இயங்கிய இடத்தில் தையல் பயிற்சிக்கு பெண்களை இணைப்பதாக சொல்லப்பட்டு வீதியில் செல்லும் பெண்களை இலக்கு வைத்து பெரும் அறிவிப்பு பெயர்ப்பலகை கட்டப்பட்டிருந்தது. அதிக சம்பளம் தங்குமிட வசதி என்பன தரப்படும் என்றும்  உடனடியாக இணையுமாறும் அந்த ஆளிணைப்பில் ஈடுபட்டவர்கள் வண்ண வண்ண துண்டுப் பிரசுரங்களை தெருவால் பெண்களுக்குக் கொடுத்தனர்.

அவர்கள் தெற்கிலிருந்து இவ்வாறு ஆட்களை இணைக்க வந்திருந்தனர். ஆனால் ஆடுகளை விலைக்கு வாங்குவது போலத்தான் தெருவில் நின்றவர்கள் கூவிப் கூவிப் பெண்களை கொண்டு செல்ல முற்பட்டார்கள். பெண்களை உடனுக்குடன் ஏற்றிச்செல்ல குளிருட்டப்பட்ட பேரூந்தும் தயாராக நின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி ஒருவர் அந்த இடத்திற்கு வந்த பொழுது குறித்த ஆளிணபைபு நபர்கள் பதற்றம் கொள்ளத் தொடங்கினார்கள். அத்துடன் ஆளுநரிடம் அனுமதி பெற்றே இவ்வாறு ஆட்களை சேர்ப்பதாக கூறினார்கள்.

யுத்தத்தின் பெழுது மக்களை கொன்று குவிக்கலாம் என்று இலங்கை அரசால் படைகளுக்கு பூரண சுகந்திரம் கொடுக்கப்பட்டது போலவே யுத்தத்தின் பின்னர் சுகந்திரமாக பெண்களை கொண்டு செல்லலாம் என்றும் பூரண சுகந்திரம் கொடுக்கப்பட்டடிருக்கிறது. மனிதர்களுக்கு எந்த விதமான மதிப்புமே இல்லாத தேசமாக தமிழர்களின் தேசம் மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த மாதிரியான ஆள் வியாராரஙகளும் கடத்தல்களும் மிக இனிதாகவே நடக்கின்றன. ஆள்களை அள்ளிச்செல்லவும் முடிகின்றது. தமிழர்களை மனிதர்களாக கருதவில்லை என்ற ஆண்டாண்டுத் துயரம்தான் இந்த மாதிரியான வண்டிகளை இங்கு அனுப்புகின்றன.

இப்பொழுது வந்திருக்கும் வண்டியில் இராணுவத்திற்கு பெண்கள் எடுக்கப்டடுள்ளனர். உண்மையில் தமிழ்ப் பெண்கள் இதில் இணைந்தார்களா? என்பதுதான் எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் கேள்வியாக எழுகின்றது. இன்று வடக்கு கிழக்கில் உள்ள நிலமையை பயன்படுத்தி மூளைச்சலவை செய்யப்பட்டு பலவந்தமாக தமிழ் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மையில் நடந்திருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட குடும்பங்களுடன் பேசும் பொழுது உணர முடிகிறது. குடும்பத்தில் வறுமையும் உழைப்பதற்கான ஆண்களும் இல்லாத குடும்பங்களில் உள்ள அப்பாவிப் பெண்களைத்தான் இலங்கை  இராணுவத்தினர் இந்த நடவடிக்கையில் பலியாக்கியுள்ளனர்.

கிளிநொச்சியில் மகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு நுழைந்த இராணுவத்தினர் வறுமைப்பட்ட குடும்பங்களிடம் அதிச சம்பளம் தருகிறோம் என்று சொல்லி தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டாயம் இணைக்க வேண்டும் இனி யுத்தம் இல்லை பயப்பிட வேண்டாம் என்று சொல்லி இராணுவததினர் பலபெற்றோர்களை ஒப்புதல் அளிக்க வைத்தனர். மிகமிக அவசரமாகவும் தீவிரமாகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட படையினர் அதற்கான பெரும் விழாவையையும் நடத்தி ஊடகங்கள் எங்கும் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

ஈழ யுத்தத்தில் மிகப்பெரும் கொலைகளைச் செய்த இலங்கை இராணுவத்தில் ஏன் தமிழ்ப்பெண்கள் இணைத்தார்கள் என்பதும்? யுத்த களத்தில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து இனப்படுகொலை செய்த இலங்கை இராணுவத்தில் ஏன் தமிழ் பெண்கள் இணைந்தார்கள் என்பதும் முதன்மையான கேள்விகளாக எழுகின்றன. இந்த கேள்விகளுக்குக்கான பதில்கள்தான் தமிழ் பெண்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த இனத்தையும் பலியாக்கியதை உணர்த்துகிறது.

இலங்கை இராணுவம் என்பது சிங்கள இராணுவமாகவே உலகமெங்கும் கருதப்படுகிறது. அதுவே உண்மையாகவும் இருக்கிறது. தமிழர்களை இராணுவத்தில் சேர்க்காமல் சிங்கள இராணுவமாகவே தனித்துவத்தை பேணி வந்திருக்கிறது இல்கை அரசு. அதன் காரணமாகவே இலங்கை இராணுவத்தினர் அந்நிய இனமாகக கருதி ஈழத்து மக்களை வரலாறு முழுதும் படுகொலை செய்து வந்தருக்கின்றனர். ஈழ தேசத்தை அழிக்கும் ஆக்கிரமிக்கும் சிங்கள இராணுவமாகவே இலங்கை இராணுவம் உருவாக்கம் பெற்று வெற்றியும் கண்டிருக்கிறது.

இலங்கை இராணுவம், தான் இழைத்த போர்க்குற்றங்களுக்காக உலகின் பல்வேறு நாடுகளாலும் ஐ.நா போன்ற அமைப்புக்களாலும் குற்றம் சுமத்தப்பட்டு அணைத்துலக விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்ஙகை இராணுவம் என்பது சிங்கள இராணுவம் அல்ல. அதில் தமிழர்களும் உள்ளனர் என்பதை காட்டி போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கவும் தமிழர்களை இராணுவத்தில் இணைத்து அவர்களுக்கு உரிமை வழங்போரக்குற்றங்களை இழைத்த இராணுவத்தில் தமிழ்ப்பெண்கள் ஏன் இணைந்தார்கள்? பலருக்கு எதற்காக கொண்டு செல்லப்படுகிறோம் என்பதே தெரியாது. இராணுவத்தின் சிவில் பணிகளில் பணியாற்றுவது என்று கூறி ‘சிவில் வேலை’ என்னும் விதமாக படையினர் பிராசரம் செய்தனர். இதற்காக பல தரப்பட்ட பெண்களையும் இராணுவத்தினர் சேர்த்தனர். முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் பாடசாலை தொண்டர் ஆசிரியர்களுக்கும் சிவில் நிர்வாகப்பணி என்று நியமனம் வழங்கப்பட்டது. சுகந்திரக்கட்சியினர் கிளிநொச்சியில் இந்த நியமனஙகளை வழங்கியுள்ளனர். ஏன’ எதற்கு என்று தெரியாமல் மக்கள் குழப்பப்பட்டனர். இராணுவத்திற்கு என்று எடுக்கப்பட்டவர்களில் மிகவும் வயது குறைந்த சிறுமிகள் முதல் திருமணமாகி கணவனை இழந்த பெண்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளனர். எல்லோரும் பணத்திற்காக என்ன பணியென்று அறியாமல் இணைக்கப்பட்டார்கள். வெளியில் இராணுவத்தில் இணைத்தாக அறிவிக்கப்பட்டனர். கிவிட்டோம் என்பதை காட்டி தமிழர் உரிமையை மறுக்கவுமே இந்த நடவடிக்கை மேற்க்கொள்பட்டிருக்கிறது.

இந்தப் பெண்கள் இலங்கை இராணுவத்தின் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கபடலாம் என்றும் அதற்காகவே இராணுவத்தினர் இணைத்திருக்கலாம் என்றும் கூட்டமைப்பு எம்.பி ஒருவர் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தினர் வன்னி இறுதியுத்ததின்பொழுது இசைப்பிரியா என்ற பெண்போராளியை எப்படிச் சிதைத்து கொன்றார்கள் என்பதை உலகம் அறியும். இசைப்பிரியா மட்டுமல்ல பல பெண்களை இப்படி சிதைத்து கொன்றது. வரலாறு முழுதும் கோணேஸ்வரி கிருசாந்தி, தர்சினி என்று பல பெண்கள் இராணுவத்தின் பாலியல் வன்வெறிக்கு பலியாகியுள்ளனர்.

வன்னியில் போராட்ட காலம் பெண்களுக்கு மிகவும் சுகந்திரமான நிலையை தோற்றுவித்தது. உலகில் நடந்த பல போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு முதன்மையான இடத்தைக் கொடுத்தது ஈழப்போராட்டம். போர்களத்தில் மட்டுமன்றி பல்வேறுவிதமான ஆளுமைகளை வளர்த்த ஈழப்பேராட்டம் பெண்களுக்கான சூழலை உருவாக்கியது. ஈழப்பெண்கள் தனித்துவமான பெண்களாகவே உலகமெங்கும் விளங்குகிறார்கள். பெண்போராளிகள் எக்காலத்திலம் எவ்வெளியலும் களமாடிய பொழுது முழு ஈழப்பெண்களும் அந்த சுகந்திரத்தை பெற்றிருந்தார்கள். அதனால் வன்னிப் பெண்கள் எப்பொழுதும் துணிச்சல் கொண்டவர்களாக உள்ளனர். இந்தத் தன்மைகள்தான் எந்தப் பணிக்கும் எங்கும் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை பெண்களுக்கு கொடுக்கிறது. ஆனால் இலங்கை இராணுவத்தினர் உலகில் மிகவும் கொடிய பல குற்றங்களை இழைத்த அதாவது பிணங்களை புணர்ந்த இராணுவத்திரானவார்கள். அதனால் இந்தப் பெண்கள் ஆபத்தான ஒரு இடத்திலேயே உள்ளனர் என்பதே இங்கு கவனிக்கப்படவேண்டியது.

இராணுவத்தினரின் இந்த திட்டத்திற்கு பலியானமைக்கு நம்முடைய சமூகத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் பெரிய பொறுப்பிருக்கிறது. போரால் நலிவடைந்த தேசத்திற்கான அரசியலை செய்ய தவறியதன் விளைவுதான் இது. பாராளுமன்றங்களில் அரசியல் பேசுவதுடன் கூட்டமைப்பினர் தங்கள் பணியை நிறுத்திக்கொள்கிறார்கள். எங்காவது ஒரு சிறிய கட்டடித்த்தை திறக்கும் நாடாவை வெட்டி வைக்க ஒன்றிணையும் அவர்களது கைகள் எங்கள் மக்களிடம் ஒன்றிணைந்து பணியாற்ற மறுக்கின்றன. தன்னை வளர்க்கவும் தனது அரசியலுக்காகவும் என்று செயற்படுபவர்கள் நலிவுற்ற இந்த மக்களுக்கான பணியை மெய்யாக செய்யாமல் சம்பிரதாயபூர்வமாக செய்துகொண்டு அதை அரசியல் ஆக்குகின்றனர்.

இராணுவத்தில் இணைக்கப்பட்டதனால் அதிர்ச்சியடைந்த 13 பெண்கள் மனநிலை பாதிப்பிற்கு உள்ளானார்கள். அவர்களில் இருவரைத் தவிர ஏனையவர்கள் இரண்டுநாட்களிலேயே மீண்டும் இராணுவத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். கொண்டு செல்லப்பட்டு சில நாட்களிலேயே 13 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஏனைய பெண்களின் மனநிலை எப்படியுள்ளன என்பதும் இங்கு முக்கியமானது.

இராணுவத்தின் அச்சுறுத்தல் பாணியுடன் கூடிய தொடர் தொல்லைகளால் பிள்ளைகளை கொடுத்த வீடுகளில் கண்ணீர் இன்னும் காயாமல் கொட்டுகிறது. எதுவும் செய்ய முடியாதவர்களாகவும் துயரக்காலத்தில் வாழும் சனங்களாகவும் இந்த மக்கள் சபிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வகையில் இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன் கொடுமைகளுக்கு உள்ளானார்களா? என்றஅனல் பறக்கும் விவாதங்களையும் XRAY றிப்போட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியவாதிகள், தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள், மார்க்சிசவாதிகள், மார்க்சிசத்திற்கு எதிரானவர்கள், பெண்ணிலைவாதிகள், சர்வதேச செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள், புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் என பட்டங்களை சூட்டியவர்களும் சூட்டுபவர்களும் இந்த விவாதங்களை நடாத்துகின்றனர். ஆனால்

இந்த சந்தேகங்களுக்கு காரணம் என்ன?

இவற்றை நிவர்த்திக்கும் பொறுப்பு யாருக்கு உண்டு? 

ஒரு நாட்டின் இராணுவத்தில் அந்த நாட்டின் குடிமக்கள் சேர்க்கப்படும் போது குறிப்பாக இலங்கையில் இளைஞர் யுவதிகள் இராணுவத்தில் இணைக்கப்பட்ட போது பின்பற்றப்பட்ட பொது விதிகள் இந்த வறுமைப்பட்ட அப்பாவி  பெண்களை இணைத்துக் கொள்ளும் போது பின்பற்றப்பட்டதா?

விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பை மேற்கொண்டனர், மூளைச்சலவை செய்து தமது படையில் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொண்டனர் எனக் கூப்பாடு போடும் அரசாங்கத்திற்கு தோள் கொடுக்கும் தோழர்கள் இந்தப் பெண்களின் விடயத்தில் இலங்கை அரசும் படைத்தரப்பும் நடந்து கொண்ட விதம் குறித்து மொனித்திருப்பது ஏன்?

தெற்கில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த படையினர் ஏதாவது அசம்பாவிதம் காரணமாக தொகையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது கடைப்பிடிக்கப்படும் பொது விதிகள் இந்த ஏழைத் தமிழ்ப் பெண்கள் விடயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டதா?

தெற்கில்  படை முகாம்களில் உள்ள படையினர் தொகையாக நோய்வாய்ப்பட்ட பல சந்தர்ப்பங்களின்  போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. அவ்வாறான நிகழ்வுகளின் போது எவரும் உட்செல்ல முடியாதவாறு தனியான வார்ட்டுகளில் சேர்க்கப்பட்டு காவல்காக்கப்பட்டார்களா?

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பெரும்பான்மையின படையினரை ஊடகங்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ பார்வையிட அனுமதிப்பைதைப் போன்று  ஏன் கிளிநொச்சியின் பின்தங்கிய கிராமங்களில் இருந்து ஏமாற்றப்பட்டு இணைக்கப்பட்ட இந்தப் பெண்களின் உறவினர்களை அல்லது ஊடகவியலாளர்களை பார்வையிட ஏன் அனுமதிக்கவில்லை?

ஒரு நாட்டின் இராணுவத்தில் இணைக்கப்படும் போது அவர்களின் உடற் தகுதிகள் பரிசீலிக்கப்படுவது வழமை. அவ்வாறாயின் இந்தப் பெண்களின் உடற் தகுதிகள் குறித்து எந்த வைத்தியர் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்? 

உண்மையில் இலங்கை அரசாங்கமோ அல்லது படையினரோ மூளைச் சலவை செய்யாமல் கட்டாயப்படுத்தாமல் உண்மையைச் சொல்லி இந்தப் பெண்களை படையில் இணைத்திருந்தால் வெளிப்படையாக அந்தப் பெண்களினதும் பெற்றோர்களினதும் கருத்துக்களை கேட்பதற்கு இடமளிப்பார்களா? இல்லாவிடின் இதற்கு வக்காளத்து வாங்குபவர்கள் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுப்பார்களா?

எந்த விதமான வர்தமானி அறிவிப்புகளும் இன்றி கிளிநொச்சியின் பின்தங்கிய கிராமங்களில் அப்பாவிப் பெண்களை இலக்கு வைத்து படையில் இணைத்துக் கொண்ட இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு ஏன் இதுவரை தமிழ் இளைஞர்களை படையில் இணைத்துக் கொள்ளவில்லை? 

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆக ஈழப்பெண்களின் பலத்தையும் அவர்களின் தனித்துவத்தையும் நன்கு உணர்ந்த இலங்கை அரசாங்கமும் படையினரும் அவர்களை பலியாடுகள் ஆக்குவதன் மூலம் தமிழ் மக்களை தொடர்ந்தும் பலியாக்க திட்டமிட்டிருக்கிறது.

குறிப்பாக கடந்த கால வரலாறுகளும் படிப்பினைகளும் இலங்கையை ஆண்ட அரசாங்கங்களோ, அவர்களின் கிழான படைகளோ தமிழ் மக்கள் விடயத்தில்  நடந்து கொண்ட விதங்கள் பலத்த சந்தேகங்களையே ஏற்படுத்தும் என்பது யதார்த்தம். அதுவும் தற்போதய அரசாங்கமும் பாதுகாப்புச் செயலரும் அவர்தம் படைகளும் தமிழ்ப் பெண்கள் குறித்து வெளிப்படையாக கூறிய கருத்துக்களும், நடவடிக்கைகளும் பன்மடங்கு சந்தேகங்களையே தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.இந்த சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொறுப்பு தமிழ் மக்களிடத்தேயோ அல்லது அவர்கள் சார்ந்த கட்சிகள் தலைவர்களிடத்தோ இல்லை என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *