இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தின் பயனாளிகள் தெரிவில் அரசுசார்ந்த அரசியல் வாதிகள் செல்வாக்குச் செலுத்தி வருவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்திய அரசின் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் முதற்கட்டப்பணிகள் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டாம் கட்டப் பணிகளுக்கான பயனாளிகள் தெரிவு தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன் போதே அரசில் அங்கம் வகிக்கின்ற அரசியல் வாதிகள் மறைமுகமக தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது தமக்கு ஆதரவானவர்களையும் தமது கடசியில் செல்வாக்குச் செலுத்துகின்றவர்களுடையவர்களது பெயர் விபரங்களை புள்ளித் திட்டத்தின் அடிப்படையில் சிபார்சு செய்கின்றனர்.
இதனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வீட்டுத்திட்டம் சென்றடையாமல் பாதிக்கப்படாத மக்களுக்கு சென்றடைவதாக உண்மையிலையே பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.