வல்வை ஊறணி ஊற்று பெயர்ப்பலகை திரைநீக்கம் (படங்கள்)

மரபுரிமை பேணும் அமைச்சினால், மரபுரிமை பேணப்படும் இடங்களில் ஒன்றாக வல்வெட்டித்துறை ஊருணி ஊற்றுக் (ஊறணி) கேணிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு 18.12.2012 (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11.00 மணிக்கு ஊறணிக்கேணியில் நடைபெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நகரபிதா நடராஜா அனந்தராஜ் அவர்களினால் முன்வைக்கபட்ட செயல்திட்டத்தின் அடிப்படையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிபார்சிற்கு அமைய மரபுரிமை அமைச்சினால் மரபுரிமை பேணப்படவேண்டிய தலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக மரபுரிமைகள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் திருமதி.விஜிதா சத்தியகுமார் கலந்துகொண்டு பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து வைக்கவுள்ளார்.  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அலுவலர் திருமதி. சண்முகப்பிரியா உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.