வல்வை செய்திகள்

வல்வையைச் சேர்ந்த தாயும் மகனும் கராத்தேயில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

வல்வெட்டிதுறையைச் சேர்ந்த தாயும் மகனும் கராத்தே போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தெரிவாக்கியுள்ளனர். நேற்று 06.12.2015 யாழ் IMO தேவாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்டத்திலான கராத்தேப் போட்டிகளில் கலந்து கொண்டு இவர்கள் முதலிடம் பெற்றதை அடுத்தே தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்..
நேற்று நடைபெற்ற போட்டிகளில் 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் பங்கு பற்றிய திருமதி முரளி மாலதி, காட்டா போட்டியில் முதலிடத்தையும், 7 வயதுப் பிரிவில் பங்கு பற்றிய திருமதி முரளி மாலதியின் மகனான முரளி பரிதியன் 2 ஆம் இடத்தையும் பெற்றனர்.

இவர்களுக்கான தேசிய மட்ட போட்டிகள் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெறவுள்ளது

பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தில் (Institute of Martial Arts, Point Pedro), ஆசிரியர் இரட்ணசோதி அவர்களிடம்  இருவரும் கராத்தே பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *