இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முழுமையான ஆதரவு வழங்கும்.

இலங்கைக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங் தலைமையிலான குழுவினர், இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரஜீவ் தெவாரி, கேணல் எஸ்.கே.ஆச்சர்யா, கேணல் எஸ்.சீ.தேவ்கன், கெப்டன் ரஜீவ் மெத்திவ்ஸ் மற்றும் இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் அசோக் கே.காந்தா ஆகியோருடன் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, ஜனாதிபயின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் போது இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதிக்கு புத்தர் சிலையொன்றைக் அன்பளிப்பு செய்ததுடன், இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் ஜனாதிபதி மகிந்தவிடம் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.