கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக் கோரி பாரிசில் பேரணியாக திரண்ட மக்கள்!
Place Gambetta பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு தினமான 22.12.2012 நேற்று சனிக்கிழமை மாபெரும் அமைதிப் பேரணியும் ஒன்றுகூடலும் பாரிசில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
பகுதியில் அமைந்துள்ள மாநகரசபை கட்டடத்தின் முன்பாக பிற்பகல் 2 மணியளவில் ஒன்று கூடிய மக்கள் கேணல் பரிதி அவர்களின் திரு உருவப்படத்தைத் தாங்கியவாறு பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக் கோரி பேரணியாகப் புறப்பட்டனர்.
தொடர்ந்து பேரணி 341 rue des Pyrénées 75020 Paris இல் அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தின் முன்றிலைச் சென்றடைந்தது. அங்கு விசேடமாக அமைக்கப்பட்ட கேணல் பரிதி அவர்களின் திரு உருவப்படம் வைக்கப்பட்ட மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.யோசெப் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் திரு உருவப்படத்திற்கு துணைவியார் மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து பொதுமக்கள் மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.
இதனையடுத்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த ‘உறுதி என்றால் பரிதி’ என்ற பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது. இந்த இறுவெட்டை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் நிதர்சன் அவர்கள் வெளியிட்டுவைக்க கேணல் பரிதி அவர்களின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் பிரான்சு நாட்டு கட்சி மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருந்தனர். பிரான்சின் La courneuve மாநகரசபை உறுப்பினர் (Anthony Russel La courneuve conseillor municipal) பேசும் போது ” பிரான்ஸ் அரசு பிரான்சில் இருந்து ஸ்ரீ லங்கா தூதராலயத்தை நகர்த்த வேண்டும். இவ்வாறான படுகொலையை செய்யும் நாடாகிய ஸ்ரீ லங்காவின் தூதராலயத்தை பிரான்சில் வைத்திருப்பது மனித வுரிமை சட்டத்தை எழுதிய பிரான்சுக்கு இழிவையே தேடி தரும் என்றார்.
குர்திஸ்தான் மக்கள் பிரதிநிகள் (Murat Roni ; Kurdhistan Makal Munnani) பேசும்போதுஇ தாம் தமிழர்களின் போராட்டத்தின் நிழலிலேயே வளர்த்தவர்கள் என்றும் தாம் தமிழர்களுக்கு நடந்த படுகொலையை தமது மக்களுக்கு நடந்ததாக பார்பதாகவும்இ தாம் எவ்வாறு குர்திஸ்தான் மக்கள் விடுதலை வேண்டி நிக்கின்றதோ அதே போல் தமிழீழ மக்களும் விடுதலையை தேடி நிற்பவர்கள்இ ஆகவே தமிழர்களின் போராட்டத்துக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்தனர்.
புரட்சிவாத சோசலிசக் கட்சியைச் சேர்ந்த ஆழளெ துயஉஙரநள (Parti de Solidarité Revolutionaire) பேசும் போது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் போல் மேர்பி என்ற நாடாளுமன்றத்தின் ஊடாக பலதடவை தமிழ் மக்களின் போராட்டம் பற்றித் தெரிவித்திருந்தோம். மக்கள் போராட்டங்கள் ஊடாகத்தான் நாங்கள் விடுதலை அடையமுடியும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சென்ற புதன்கிழமை யுனெஸ்கோ அலுவலகத்தின் முன்பாக பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திலும் நாங்கள் கலந்துகொண்டோம். தமிழர் போராட்டத்தில் தொடர்ச்சியான பங்களிப்பு என்றும் இருக்கும் என்றார். இந்நிகழ்வில் ஆயிரம் வரையான மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.