முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 675 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
இதே போன்று மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபபரப்பை இராணுவத்திற்கென கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
இவ்வாறு ஆக்கிரமித்துள்ள காணிகளை தமது தேவைக்காக பயன்படுத்தி வருகின்ற நிலையிலும் தொடர்ந்தும் மேலதிகமாகவும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
இவ்வாறு தற்போது ஆக்கிரமிக்கப்படும் நிலப்பரப்புக்களில் படையினருக்கு சொந்தமான பகுதி என அடையாளப்படுத்திவிட்டு இராணுவப் பாதுகாப்பு போடப்படுகிறது.
இதில் குறிப்பாக புலிகளின் பண்ணைக் காணிகள் உட்பட பொது மக்கள் இல்லாத காணிகளென தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு படையினர் ஆக்கிரமிக்கின்றனர்.
இப் பிரதேச செயலர் பிரிவில் உடையார் கட்டு தெற்று பகுதியில்125 ஏக்கரும்,கோம்பாவிலில் 200 ஏக்கரும், கைவேலியில் 250ஏக்கரும் தேவிபுரத்தில் 100 ஏக்கருமென மொத்தமாக 675 ஏக்கர் நிலப்பரப்பை படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
இதில் குறிப்பாக கேம்பாவிலில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் 200 ஏக்கர் பண்ணைக் காணியை தமக்குத் தருமாறு படையினர் பிரதேச செயலகத்திட்ம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே வேளை இதே போன்று மாவட்டத்தின் பல இடங்களிலும் படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
மேலும் தற்போதும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்காணிகளை தமக்கு வழங்குமாறு படையினர் பிரதேச செயலக ரீதியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.