வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் மார்கழி மாத திருவெம்பாவையும், சங்கு ஊதியும்

வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் மார்கழி மாத திருவெம்பாவையும், சங்கு ஊதியும்,

வல்வை  இந்து ஆலயங்களிலும், மார்கழி மாதத்தில் நடைபெற்றுவரும்  திருவெம்பாவையும், அதிகாலையில் 02.00 மணிக்கு சங்கு ஊதி நிகழ்வும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆறு காலப் பூசையுடன் மார்கழி மாத சிறப்புப் பூசையும் நடைபெறுவது வழக்கம்.

மார்கழி மாத முழுவதும் திருவெம்பா விரத காலத்தில்  வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டு செல்வார்கள். இச் சங்கு ஊதி நிகழ்வானது வல்வை நெடியகாட்டு இளைஞர்களாலும் , வல்வை உதய சூரியன் இளைஞர்களாலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை இச் சங்கு ஊதும் நிகழ்வை வல்வை உதய சூரியன் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.