செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 7 பேர் உண்ணாவிரதம்.

தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் 7 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

கியூ பிரிவு பொலிஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் 4 பேர் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் 41 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் அவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும் பேச்சுவார்த்தைக்கு பிறகு 45 நாள்கள் ஆகியும் தங்களை விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படாத நிலையில் மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஈழத் தமிழர்கள் தவதீபன், காண்டீபன், ஜான்சன், செüந்தரராஜன், நந்தகுமார், செல்வராஜ், சசிகுமார் ஆகிய 7 பேரும் ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணா விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.