முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் புலிக்கொடி!

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் புலிக்கொடி வன்னி மண்ணில் பறந்துள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன.

இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தங்கியின் மேல் இன்று காலை 6.00 மணியளவில் புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, காலை 7.00 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த புலனாய்வாளர்கள் புலிக்கொடியை அகற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.