Search

இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்கமார் தனுஜா

இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்கமார் தனுஜா
இலங்கை வல்வெட்டித்தறையை சேர்ந்த செல்வி ஜெயக்கமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மாநிலங்கள் அளவில் சென்னை வேளாச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்றபொட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்தள்ளார்.
இவர் 9 வயதுக்குற்பட்ட 50M Buterfly நீச்சலினை 39 வினாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார். ஆத்தோடு இதற்கு முன்னரும் பல முறை நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளமை கறிப்பிடத்தக்கதாகும்.




Leave a Reply

Your email address will not be published.