Search

இலங்கை அரசே புலிகளின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும் – ஹரிசன்

பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன்“தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.

துப்பாக்கிகள் மௌனமாகி விட்ட போதிலும், அச்சம், அவமானம், பெளதீக ரீதியான பாதுகாப்பின்மை, சட்டத்தின் ஆட்சியின் குறைபாடு, இராணுவ மயமாக்கல், வடக்கில் சிங்கள மாயமாக்கல், சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் பகிரப்படாத நிலையே அங்கு காணப்படுகிறது.

குறைந்தபட்சம் விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்தின் பலத்துக்கு ஈடு செய்யும் நிலையிலேனும் இருந்தார்கள் என்று தமிழர்கள் பலர் சொல்கின்றனர்.

இப்போது எல்லா அதிகாரங்களும் ஒரே பக்கத்தில் உள்ளது.

விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் கூட, சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு அவர்களின் உரிமைகளைக் கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை.

சிறிலங்கா அரசாங்கம் கவனமாக கையாளத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின் பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும்.

மக்களின் நினைவு கூரும் உரிமை அல்லது தமது கலாசாரத்தை பாதுகாக்கும் உரிமை, மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுமானால், அது ஏற்கனவே வலுவாக உள்ள உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.

விரைவிலேயே அல்லது பின்னர், அது பழிவாங்கும் நெருப்பாக எரியும்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *