ஒஸ்ரேலியாவில் சிங்கள பயங்கரவாத அரசின் கிரிக்கெட் அணிக்கு எதிராக போராட்டம்

சிங்கள பயங்கரவாத அரசின் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் மேல்போனில் பங்கேற்கும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இலங்கை தமிழர்கள் மைதானத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலக விளையாட்டு அரங்கில் இருந்து இலங்கையை அகற்ற வேண்டும். ஸிம்பாப்வே விடயத்தில் நடந்துக்கொண்டதை போன்று இலங்கை விடயத்திலும் அவுஸ்திரேலியா தமது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோருகின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டின்மூலம் இலங்கைக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதனால், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது அழுக்கான உருவத்தை கழுவிக்கொள்ளவே உதவும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2007 ஆம் ஆண்டில், ஸிம்பாப்வேக்கு கிரிக்கட் சுற்றுலாவை புறக்கணித்த அவுஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமர் ஜோன் ஹவாட், அவுஸ்திரேலிய அணி, ஸிம்பாப்வே செல்லுமானால், அது ஜனாதிபதி ரொபட் முகாபேயின் சர்வதிகாரத்துக்கு ஒட்சிசன் வழங்கும் செயலாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டிருந்ததாக ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர் ட்ராவோர் கிரான்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையில் இராணுவ அடக்குமுறை ஆட்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் இதனை உறுதிசெய்து சுயாதீன விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் கிரிக்கெட் அணியை புறக்கணிப்பதில் எவ்வித தவறும் இல்லை. அத்துடன் வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை கிரிக்கெட் அணி, அரசியலுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறது என்று கிரான்ட் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் போர்குற்றங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச சுயாதீன விசாரணைகளுக்கு இணங்கும் வரை இலங்கையுடன் விளையாட்டு தொடர்புகளை அவுஸ்திரேலிய பேணக்கூடாது என்றும் கிரான்ட் தெரிவித்துள்ளார்.

ட்ராவோர் கிரான்ட், முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெ ஏஜ் செய்திதாளின் எழுத்தாளரும் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published.