மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து அகதிகள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் அவரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர